தீபாவளி பண்டிகையையொட்டி கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அந்த தெரு இருவழிப்பாதையாக இருப்பதால் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தீபாவளி பண்டிகை முடியும் வரை வேலப்பர் கோவில் தெருவை ஒருவழிப்பாதையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?