மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் மிகுந்த சிரம்த்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.