மதுரை மகாத்மா காந்தி நகர், சிந்து நதி தெரு அருகே மந்தை அம்மன் கோவில் மூன்றாவது தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் புதிய சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.