திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தாமரைப்பாக்கம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் அந்த சாலையில் மண் தூசி அதிகமாக இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எதிரே செல்லும் வாகனம் சரியாக தெரியாத அளவுக்கு மணல் தூசி பறக்கிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.