திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி கிராமம் அருகே உள்ள பொன்னேரி நெடுஞ்சாலை செல்லும் வழியில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மழைகாலத்தில் பள்ளம் தெரியாமல் தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுகக வேண்டும்.