தஞ்சை ராமநாதபுரம் ஊராட்சி மேல மனோஜிப்பட்டி அம்மன் நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.