நெல்லை மேலப்பாளையம் 44-வது வார்டு நடராஜபுரம் 3-வது தெருவில் சாலை முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் குளம் போன்று தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையை முழுமையாக அமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.