பேரூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சி.பி.சி. 3-வது தெருவில் மண் சாலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அத்துடன் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அத்துடன் நடந்து செல்பவர்களும் வலுக்கி விழுந்து வருகிறார்கள். எனவே அந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.