கடலூர் முதுநகரில் சாலக்கரை- ஏணிக்கரைதோட்டம் செல்லும் வழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பணியை பாதியிலேயே கிடப்பில் போட்டு விட்டதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் புதிய சிமெண்டு சாலையிலும், அதன் பிறகு குண்டும், குழியுமான சாலையிலும் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சிமெண்டு சாலை முழுமையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.