.கூடலூரில் இருந்து சுமார் 6 கி.மீட்டர் தொலைவில் ஊமையன் தொழு என்று அழைக்கப்படும் வெட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிமரத்துறை பிரிவில் இருந்து புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மழையினால் சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.