பழனி பாரதிநகரில் தார்சாலை வசதி இல்லை. மண் பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?