உத்தமபாளையம் நகரில் பழைய பைபாஸ் மற்றும் கிராம சாவடி பஸ் நிலையம் அருகில் சாலையோரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.