பழனி ரனகாளியம்மன் கோவில் சந்திப்பில் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் சிக்னல் விளக்குகள் இல்லாததால் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ரனகாளியம்மன் கோவில் அருகே சிக்னல் விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.