கரூர் மண்மங்கலம் அருகே உள்ள காளிப்பாளையம் செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் ஒரு சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், அந்த பள்ளத்தில் தற்போது பெய்து வரும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பெரிய அளவில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.