விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள கோபாலபுரம்-சாமிநாதபுரம் செல்லும் தார்ச்சலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் இரவு நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?