அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லபுரம் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் சென்று வரும் நிலையில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.