சென்னை மேற்கு மாம்பலத்தையும் சைதாப்பேட்டையும் இணைக்கும் கோடம்பாக்கம் ரோடு மோசமான நிலையில் உள்ளது. மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்,சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். பயணிகளின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.