சிதிலமடைந்த பெயர் பலகை

Update: 2024-10-13 11:44 GMT

பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நகருக்குள் வராமல் முசிறி, குளித்தலை, நாமக்கல், கரூர், ஈரோடு செல்வதற்கு புறவழிச் சாலை உள்ளது. இந்த சாலைக்கு முன்பாக ஊர் செல்லும் வழிகாட்டி பலகைகள் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த சாலையில் 2 இடங்களில் ஊர் பெயர் பலகைகள் சிதிலமடைந்து ஊரின் பெயர் இல்லாமல் உள்ளது. இதனால் சென்னையிலிருந்து முசிறி வழியாக கரூர், ஈரோடு, கோவை மற்றும் நாமக்கல் வழியாக சேலம், பெங்களூரு செல்லும் கனரக வாகன ஓட்டிகள் தகவல் பலகை இல்லாததால் துறையூருக்குள் வந்து செல்கின்றனர். இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் துறையூர் நகருக்குள் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்