சேறும்,சகதியுமான சாலை

Update: 2024-10-13 10:34 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடம்பை தெற்கு ஆதிதிராவிடர் தெருவில் போதிய தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்