தஞ்சை மாவட்டம் தெக்கூர் கிராமத்தில் ஒரத்தநாடு-திருவோணம் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை தெக்கூர் வழியாக செல்லம்பட்டிக்கு செல்லும் பாதையில் சேதமடைந்து இருக்கிறது. சாலையின் நடுவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளமாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாலையும் குறுகலாக அமைந்து இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.