மேலபுத்தேரியில் இருந்து ஆட்டுப்பட்டி காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் சிலர் குப்பைகளை வீசுவதாலும், முறையாக பராமரிக்காததாலும் தண்ணீர் வடிந்ேதாட வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருவதால் முதியோர்கள், பெண்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.