கஸ்பாபேட்டை-மொடக்குறிச்சி சாலையில் தொட்டிபாளையம் காலனி முன்பு உள்ள ரோட்டில் கடந்த பல நாட்களாக குழி உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக குழியில் தென்னை மட்டை நட்டு வைத்துள்ளனர். இதனால் ரோடு அகலம் குறைந்து குறுகியது போல் காணப்படுவதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குழியை மூடி வாகனங்கள் எளிதாக சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.