மேம்பாலம் அமைக்க வேண்டும்

Update: 2024-10-06 16:28 GMT

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் உள்ள வைகை அணை பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் வழியாக தான் பூங்காவின் இருபுறத்துக்கும் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது தரைப்பாலத்தின் பாதையை முள்வேலி போட்டு வைகை அணை நிர்வாகம் அடைத்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பூங்காவை முழுமையாக பார்வையிட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்