குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-06 11:01 GMT
கரூர் அரசு காலனியில் உள்ள கரிகாலி நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழை காலம் என்பதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேலும் செய்திகள்