அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பஸ்கள் நின்று பயணிகளை இறக்கும்போது வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று நிற்கின்றன. ஒதுங்கி செல்ல வழியில்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்க புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள சாலையை அகலப்படுத்தவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?.