மோசமான சாலை

Update: 2024-09-29 15:15 GMT

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகர் கருணாநிதி சாலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால், தற்போது எந்த பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய சாலை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்