சிவகங்கை மாவட்டம் கருதப்பட்டியில் இருந்து தேவகோட்டை வரை செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைப்பார்களா?