ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தை அடுத்து மேச்சேரி பிரிவு ரோடு உள்ளது. இந்த இடத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த பிரிவு சாலையானது அதிக போக்குவரத்து மிகுந்த இடமாக உள்ளது. எனவே இந்த இடத்தில் சிறிய ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் சாலை திசை காட்டி அறிவிப்பு எச்சரிக்கை பலகைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமரன், தாரமங்கலம்.