கோவை சரவணம்பட்டியில் ஜி.கே.எஸ். நகரில் இருந்து வி.ஐ.பி. சென்ட்ரல் டவுன் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அதுவும் மழை பெய்துவிட்டால் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதனால் விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், சரவணம்பட்டி.