குண்டும் குழியுமான சாலை

Update: 2024-09-15 08:00 GMT

ஊட்டி அருகே உள்ள முத்தோரை பாலடா பகுதியில் இருந்து பைகமந்து, அன்பு அண்ணா காலனி வழியாக லவ்டேல் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. அந்த சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். அத்துடன் நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்