சேதமான சாலை

Update: 2024-09-08 19:50 GMT

பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சியில் அமைந்துள்ளது புதுகரம்பு-தண்டுகாரண அள்ளி சாலை. எம்.கே.நகர், தண்டுகாரணஅள்ளி, குறவன்தின்னை ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வரவும், மழைக்காலங்களில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-குமார், குறவன்தின்னை.

மேலும் செய்திகள்