கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆஸ்ரமம் மற்றும் கரியமாணிக்கபுரம் இடையில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உலோகத்திலான விபத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்புகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த விபத்து பாதுகாப்பு தடுப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.