கோவை போத்தனூரில் இருந்து சுந்தராபுரம் செல்லும் சாலையில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்து பல வாரங்கள் ஆன பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பாத்திமா, போத்தனூர்.