மரக்காணம் அடுத்த முருக்கேரி வேங்கடத்தம்மன் கோவில் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அங்குள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு சிமெண்டு சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.