தர்மபுரி- சேலம் சாலையில் இலக்கியம்பட்டி முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதியில் இரவு 10 மணி வரை அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த பகுதியில் சாலையின் மைய தடுப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இத்தகைய நேரங்களில் சாலையில் போதிய வெளிச்சம் கிடைக்காததால் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பகுதியில் சாலையைக் கடப்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே இந்த பகுதியில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் முழுமையாக எரிய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், இலக்கியம்பட்டி.