குண்டும் குழியுமான சாலை

Update: 2024-09-01 16:51 GMT

மதுரை பழங்காநத்தம் சுரங்கப்பாதையில் இருந்து டி.வி.எஸ்.நகர் செல்லும் வழியில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மழை பெய்யும் காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால்அப்பகுதியில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்