ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அக்ரஹாரம் தெரு சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சிறிய மழை பெய்தால் கூட சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?