குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2024-09-01 11:28 GMT

கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையிலிருந்து அண்ணாநகர் பகுதிக்கு செல்லும் தார் சாலை கடந்த15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சாலையின் நெடுகிலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்