குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பி.எஸ்.புரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கழிவுநீர் ஓடையின் மீது இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.