சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் செங்கல் சூளைகள் மற்றும் இரும்பு குடோன்கள் அதிகமாக இருப்பதால் கனரக வாகனங்கள் தினந்தோறும் அதிக பாரங்கள் ஏற்றிக்கொண்டு இந்த சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் தனியார் பள்ளி, அரசு நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சேதமடைந்த தார்சாலையை அகற்றி விட்டு புதிய தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், இரும்பாலை.