கொண்டலாம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து பி.நாட்டாமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை தான் பி.நாட்டாமங்கலம், தீரானூர், தம்மநாயக்கன்பட்டி, கொழிஞ்சிபட்டி, கரட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், பி.நாட்டாமங்கலம்.