பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மங்கம்மாள் சாலை முதல் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சிமெண்டு சாலை முழுமையாக முடிக்காமல் பாதி தெருவரை அமைத்துள்ளனர். இதனால் மழைக்காலத்தில் சிமெண்டு சாலைபோடாத இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே முதல் தெருவில் எஞ்சியுள்ள பகுதியிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.