குளம்போல் காட்சியளிக்கும் சாலை

Update: 2024-08-25 18:01 GMT

நாமக்கல் பேளுக்குறிச்சியில் இருந்து பழனியப்பர் கோவில் செல்லும் வழியில் ஒரு பகுதியல் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் பல நாட்கள் வரையில் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

-சுந்தரராமன், பேளுக்குறிச்சி.

மேலும் செய்திகள்