நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் புறவழிச்சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள குறுகிய சாலையில் எதிர் எதிரே வாகனங்கள் செல்கின்றன. இதனால் தொடர் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளன. மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளர்ந்து சாலையில் எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபின், நாமக்கல்.