பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2024-08-25 11:26 GMT

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் ரெயில்வே பாலம் அருகில் உள்ள சாலை முழுவதும் பெயர்ந்து பள்ளம் விழுந்து உள்ளது. அந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீராலும், பெயர்ந்து கிடக்கும் கற்களாலும் தவறி விழுந்து காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்ேறார், தினசரி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்