கோவை அருகே பேரூர் அருகே சிறுவாணி மெயின்ரோடு பீட்பள்ளம் முதல் மாதம்பட்டி வரை சென்டர் மீடியன் இல்லை. மேலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு புறவழிச்சாலை பணிக்காக தூண் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அங்கு எந்தவொரு எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.