தொடர் மழையால் சாலை அரிப்பு

Update: 2024-08-18 17:32 GMT

கொல்லிமலையில் உள்ள தெம்பலம் பஸ் நிறுத்தம் வழியாக அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக தொடர் மழையால் அங்குள்ள சாலையோரம் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்கள் அவ்வழியே அடிக்கடி சென்று வருகிறது. எனவே விபத்துகள் எதுவும் ஏற்படாத வகையில் சாலை அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை விரைந்து சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புகழேந்தி, சோளக்காடு.

மேலும் செய்திகள்