ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கமர்சியல் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை தற்போது ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. இதனால் அதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள் கால் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த நடைபாதையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.