சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக நடைமேடை அமைக்கப்பட்டது. தற்போது இந்த நடைமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆத்தூர், சென்னை, பழைய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்ல பஸ்கள் சாலையின் நடுவே நிற்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிறுசிறு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடைமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?
-வினோத், சேலம்.