ராசிபுரம்-ஆத்தூர் மெயின் ரோட்டில் காக்காவேரி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் காவிரி ஆற்று குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட குழாய் சரிவர மூடப்படாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் சகதியில் சிக்கி விபத்து ஏற்படுவதுடன் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறுகிய சாலை வசதி கொண்ட அந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக சீரமைத்து தர வேண்டும்.
-சுந்தரம், காக்காவேரி.